தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை - Pudukottai district crime news

அறந்தாங்கி அருகே சோறு வைப்பதில் தாமதானதால் குடிபோதையில் மனைவியை மண்ணெண்ணையை ஊற்றி எரித்து கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 24, 2023, 10:31 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குமுளாக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (40). இவரது மனைவி அமிா்தவள்ளி (19). சேகர் வேலைக்கு செல்லாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்.12 ஆம் தேதியன்று வீட்டில் இரவு சாப்பாடு தயாராகி விட்டதா? என அமிர்தவள்ளியிடம் சேகர் கேட்டுள்ளார். அப்போது சாப்பாடு தயாராகாமல் இருந்துள்ளது. மேலும் சாப்பாடு தயார் செய்து தருவதாக கூறிய அவர், வேலைக்கு எதுவும் செல்லாமாட்டியா? என குடிபோதையில் இருந்த கணவரிடம் கேட்ட போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரத்தில் குடி போதையில் இருந்த சேகர் மனைவி மீது மண்ணெண்ணையை அமிர்தவள்ளி மீது ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று ( மார்ச் 24 ) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அந்த தீர்ப்பில் சேகருக்கு ஆயுள் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க:1.4 கிலோ தங்கத்தை திருடிய ஹெல்மெட் கொள்ளையர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details