தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறை கைதியை தாக்கிய காவலர்கள்? கைதியை பார்க்க அனுமதி மறுப்பதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு - refusing permission to see the inmate

புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலைக்குள் விசாரணை கைதி தாக்கப்பட்டதாகவும், அவரைப் பார்க்க சென்றபோது அனுமதி மறுக்கப்பட்டதாகவும் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கைதியை பார்க்க அனுமதி மறுப்பதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு
கைதியை பார்க்க அனுமதி மறுப்பதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

By

Published : Jan 4, 2023, 6:38 PM IST

கைதியைப் பார்க்க அனுமதி மறுப்பதாக வழக்கறிஞர் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை: மாவட்ட சிறைச்சாலையில் 500க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதுமட்டும் இன்றி இளம் சிறுவர்களுக்கு தனியாக ’பாஸ்டல் பள்ளி’ என இளம் சிறார் சிறைச்சாலையும் அமைந்துள்ளது. இந்த மாவட்ட சிறைச்சாலையில் திருச்சியைச் சேர்ந்த பப்லு என்ற பிரபு விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் வைத்திருந்ததாக காவல் துறையினர் தேடி வந்த பொழுது நீதிமன்றத்தில் சரணடைந்து, தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபு, தான் சிறையில் காவலர்களால் தாக்கப்பட்டதாகவும், தனக்கு சரிவர உணவு கொடுக்கப்படாமல், தன்னை பார்க்க வரும் உறவினர்கள் தரும் உணவு வகைகளை தன்னிடம் கொடுப்பதில்லை. மேலும் தன்னைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை என்று, சிறையில் இருந்து வெளியே வந்த கைதிகளிடம் பிரபு கூறியதாக பிரபுவின் வழக்கறிஞரிடம் தகவல் சென்றுள்ளது.

இதனால் பிரபுவின் வழக்கறிஞர் சிவகாமி அவரை பார்க்க, சிறைச்சாலை விதிகளின்படி மனு செய்து காலையிலிருந்து காத்திருந்துள்ளார். ஆனால், புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை நிர்வாகம் பிரபுவை சந்திக்க வழக்கறிஞரை அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிறை நிர்வாகம் வழக்கறிஞருக்கு அனுமதி மறுத்ததையடுத்து, மாவட்ட சிறை நிர்வாகத்தை கண்டித்து பிரபுவின் வழக்கறிஞர், சிறைக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பிரபுவின் வழக்கறிஞர் சிவகாமி கூறுகையில், “காலையிலிருந்து விசாரணைக் கைதி பிரபுவைப் பார்க்க வேண்டும் என மனு செய்து காத்திருந்தும், சிறைச்சாலை நிர்வாகம் எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.

சிறைத்துறை விதிகளை மீறி, அவர்கள் விசாரணைக் கைதியைப் பார்க்க அனுமதி மறுக்கின்றனர். அவர் தாக்கப்பட்டதாக சிறையில் இருந்து வெளியே வந்த விசாரணைக் கைதிகள் கூறியதின் அடிப்படையில், நாங்கள் அவரை பார்ப்பதற்கு சட்டப்படி மனு செய்து காத்திருந்தோம். ஆனால், மாவட்ட சிறைச்சாலை நிர்வாகம் அதற்கு அனுமதி மறுத்ததில் இருந்து அவர் தாக்கப்பட்டது உண்மை தான் எனத் தெரிய வருகிறது” எனக் கூறினார்.

இதையும் படிங்க:காவல் நிலைய முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: திடுக்கிடும் தகவல்

ABOUT THE AUTHOR

...view details