புதுக்கோட்டை:சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது மூன்று மனுதாரர்கள் வீதம், மனுதாரர்களான அவரது குடும்பத்தினரும், அவரது வழக்கறிஞரும் சந்திக்கலாம் என்றார். இத்தகைய சம்பவங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவே, தமிழ்நாடு அரசின் அனுமதியோடு தான் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்தச் சட்டம் அமலாக்கத்துறைக்கும் பொருந்தும் என அவர் குறிப்பிட்டார்.
செந்தில் பாலாஜியை இவ்வாறு கொடுமைப்படுத்தி திமுகவை அச்சுறுத்துவதற்காகவே, அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது இதுபோன்ற அடக்குமுறையை செய்வதாகவும், இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும், இது மனித மீறல் என்றும் அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம் தான் என்று கூறிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் அண்ணாமலையும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் (TR Balu defamation case against Annamalai) என்று தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கத்திற்காக 75 மரங்கள் வெட்டப்பட உள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை (karunanidhi centenary birthday) முன்னிட்டு 750 மரக்கன்றுகள் நடும் விழா சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. அமைச்சர் ரகுபதி மரக்கன்றுகளை நட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, நேற்றிரவு முதல் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சிறைத்துறையின் நடைமுறைப்படி, ஒரு நாட்களுக்கு மூன்று மனுதாரர்கள் செந்தில் பாலாஜியினை சந்திக்கலாம் என்றும்; அந்தவகையில் அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் அவரை சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
மனித உரிமை மீறல்: சிறைத்துறையிடம் முறைப்படி அனுமதி பெற்ற பின்னர் தான், யாராக இருந்தாலும் அவரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவார் எனவும், இதுதான் சிறைத்துறை விதி என்றும் தெரிவித்தார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை நடந்து கொண்ட விதம், மனித உரிமை மீறல் என்று கண்டனம் தெரிவித்தார். 17 மணி நேரத்திற்கு மேல் அவரை துன்புறுத்தி உள்ளதாகவும், இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்றும் அவர் சாடினார். இதுதான் அவருக்கு நெஞ்சுவலி வந்ததற்கான காரணம் என்றும் அவர் விளக்கினார்.