தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்சிஜன் விநியோகம் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! - மாநில மனித உரிமை ஆணையம்

புதுக்கோட்டை: அரசு மருத்துவ கல்லூரி கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் ஆக்ஸிஜன் விநியோக பாதிப்பால் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவ கல்வி இயக்குனருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆக்சிஜன் வினியோகம் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஆக்சிஜன் வினியோகம் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By

Published : Sep 1, 2020, 10:19 PM IST

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர், ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட திடீர் பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கும்படி மருத்துவக் கல்லூரி மயக்கவியல் துறை உதவி பேராசிரியர் ரவி நாதன் மருத்துவத் துறை தலைவர் பாபு ஆனந்த் மற்றும் செவிலியர்கள் ஐந்து பேர் என ஏழு பேருக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிக்கையில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இதுதொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details