புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோடியக்கரை கடற்கரை ஓரமாக ஒரு ஆண் சடலம் இருந்துள்ளது. இதனை கண்ட நபர்கள் உடனடியாக கடலோரக் காவல்படை எஸ்.ஐ ஜவஹருக்கு தகவல் தெரிவித்தனர்.
கண்டெடுக்கப்பட்ட ஆண் சடலம் மாயமான வங்கி உதவியாளருடையதா? - find
புதுக்கோட்டை: கோடியக்கரை பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவர் தெரிவித்ததாவது, 'தற்போது இந்த சடலம் யாருடையது, இவர் எங்கிருந்து வந்தவர் என்பது தெரியவில்லை இதுகுறித்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம். இவர் யார் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்பதால் தீவிர விசாரணைக்குப் பின் இவரது விபரம் தெரிவிக்கப்படும். கடலில் நீரில் உடல் ஒரு வாரம் கிடந்துள்ளதால், அழுகிய நிலையில் தற்போது உடல் மீட்கப்பட்டுள்ளது. மருத்துவர்களை வரவழைத்து அதே இடத்தில் பிரேதப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். விரைவில் இதுகுறித்து மேற்படி தகவல் வெளியிடப்படும்' என்று தெரிவித்தார்.
பின்னர், சடலமாக மீட்கப்பட்டவர் பஞ்சாப் நேஷனல் வங்கி உதவியாளர் மாரிமுத்தாக இருக்கக்கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். நேற்று அவருடைய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.