புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வெள்ளாளவிடுதி என்ற பகுதியில் தவமணி என்ற ஆசாரி அந்த பகுதியில் மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறார். மர ஆசாரி தொழில் செய்வது மட்டும் அல்லாமல் வட்டிக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி இரவு தனது சொந்த வயலுக்கு லைட் போடுவதற்காக வழக்கம்போல் சென்றுள்ளார். ஆனால், தவமணி காலைவரை வீட்டிற்கு வராததால் வயலில் சென்று உறவினர்கள் பார்த்தனர். அப்போது அங்கு மிளகாய்த்தூள் கொட்டி கிடந்திருக்கிறது பின்பு அந்த பகுதியில் விசாரித்தபொழுது நான்கு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை மிளகாய் தூள் அடித்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
பின்னர் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் அவரது உறவினர்கள் புகார் கொடுத்தனர். அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் தலைமையில் நான்கு தனிப்படைகள் வைத்து விசாரணை செய்து வந்தனர். மேலும் தவமணி தொலைபேசியில் இருந்து அவரது மகளுக்கு இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு கொலை மிரட்டல் வந்ததாகவும், அவ்வாறு கொடுக்காவிட்டால் அவரைக் கொன்று விடுவோம். என்று கொலை மிரட்டல் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளனர்.