புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் ஆகியவற்றை நடத்திவந்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டப் பணிகளைத் தொடங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்: விவசாயிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம் - புதுக்கோட்டை விவசாயிகள் சங்கம்
புதுக்கோட்டை: காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் சங்கத்தினர் அதனைப் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டி வருகின்றனர்.
kaveri-gundaru-
இதனைக் கொண்டாடும் விதமாக புதுக்கோட்டை அதிமுக நகரச் செயலாளர் பாஸ்கர், கூட்டுறவுத் தலைவர் மாரிமுத்து, முன்னாள் நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர், விவசாய சங்க நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள், விவசாயிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஒதுக்கீடு!