புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செல்லும் சாலையில், "விபத்துப்பகுதி IPC 304(A) - அலட்சியத்தால் மரணம், 279 - அஜாக்கிரதையாக வண்டி ஓட்டி சேதத்தை ஏற்படுத்துதல், 337 - அலட்சியத்தால் விபத்து ஏற்பட்டு மற்றவருக்கு உயிர் சேதத்தை ஏற்படுத்துதல்" என இந்திய தண்டனைச் சட்டத்தை வெள்ளை பெயிண்ட் கொண்டு கறம்பக்குடி காவல்நிலைய அலுவலர்கள் எழுதியுள்ளனர்.
இதனால் மக்களிடையே ஒரு அச்சம் ஏற்பட்டு வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவார்கள் என்றும் விபத்துகள் குறையும் என்றும் காவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து விரிவாகப் பேசிய கறம்பக்குடி காவல் நிலைய அலுவலர் சரவணன், மக்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இதை எழுதியுள்ளோம் என்றார்.