இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் மோசமாகிவரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
கரோனாவிற்கு கபசுப மருந்து: சித்த மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள் - சித்த மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்
புதுக்கோட்டை: கரோனாவிற்கு கபசுப சித்த மருந்து குடித்தால் நல்லது என்ற தகவலையடுத்து சித்த மருத்துவமனையில் பொதுமக்கள் குவிகின்றனர்.
kapasupa-siddha-medicine-for-corona
இந்நிலையில், புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனையில் உள்ள சித்தா மருத்துவமனையில் கரோனா நோய்த்தொற்றை குணப்படுத்துவதற்கு கபசுப சித்த மருந்து வழங்கப்படுகிறது எனத் தகவல் பரவியதையடுத்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலை 5 மணியிலிருந்து வரிசையாக மருத்துவமனையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி நிஜாமுதீன் மாநாடு சென்று திரும்பிய 42 பேர் கடலூர் மருத்துவமனையில் அனுமதி!