புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன் - தனம் தம்பதி. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் பிள்ளை உள்ளார். கூலி தொழிலாளர்களான இவர்கள் தினந்தோறும் வேலைக்கு செல்வது வழக்கம். இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான கருப்பையா, சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர் போக்சோ சட்டத்தில் கைது - காமூகன் போக்சோ சட்டத்தில் கைது
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே 6 வயது சிறுமியை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உயிருக்கு பயந்து சிறுமியும் பாலியல் அத்துமீறலை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை உணர்ந்த பெற்றோர், அவரிடம் விசாரித்தபோது கருப்பையா கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கருப்பையா சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அறந்தாங்கி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.