புதுக்கோட்டை, திருக்கட்டளை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் ஏப்ரல் 28 ஆம் தேதி வங்கியில் இருந்த ரூ.13.75 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்டது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் திருட்டு; ஊழியர்கள் 4 பேர் சஸ்பெண்ட்! - பஞ்சாப் நேஷனல் வங்கி
புதுக்கோட்டை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, அந்த வங்கியில் பணிபுரிந்த நான்கு ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இந்நிலையில் மே 3ஆம் தேதி மாரிமுத்துவின் உடல் அழுகிய நிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடற்கரை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியின் முதுநிலை மேலாளர் மாரிஸ் கண்ணன் புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் நகை திருட்டு பற்றி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் நகை மாயமான அன்று பணியில் இருந்த மேலாளர் மாரிஸ் கண்ணன், வெங்கடேஷ், ரெங்கசாமி, கோபி கண்ணன் ஆகிய 4 அலுவலர்களை வங்கி நிர்வாகம் இன்று பணியிடை நீக்கம் செய்தது. இதனால் இந்த சம்பவத்தில் அவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.