புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய நிரந்தர வாடிவாசலில் இன்று (ஜனவரி 17) காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 700 காளைகளை அடக்க 270 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்.
புதுக்கோட்டையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிரந்தர வாடிவாசலில் ஜல்லிக்கட்டு தொடக்கம் - புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதியில் 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய நிரந்தர வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
15 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தர வாடிவாசலில் தொடங்கிய ஜல்லிக்கட்டு
அந்த வகையில் 63ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு அமைச்சர்கள் ரகுபதி மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இந்த போட்டிக்காகவே ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய நிரந்தர வாடிவாசல் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பார்ப்பதற்கு தத்ரூபமாக காட்சி தரும் கோலங்கள்