தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா - களைகட்டிய ஜல்லிக்கட்டுப் போட்டி - Pudukkottai News

விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாகப் பிடித்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 12, 2023, 10:40 PM IST

திருநல்லூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா - களைகட்டிய ஜல்லிக்கட்டுப் போட்டி

புதுக்கோட்டை:அதிகப்படியான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது.‌ அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் 120 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 8ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கியது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் தை மாதம் 29ஆம் நாள் நடைபெறும். அதேபோல் இன்று (பிப்.12) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 600 காளைகள் களமிறங்கிய நிலையில், 300 காளையர்கள் பங்கேற்றனர். அப்போது, வாடிவாசலிலிருந்து துள்ளிக்குதித்து சீறிப் பாய்ந்த காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி அவற்றின் திமிலை தழுவினர்.

திருநல்லூர் ஜல்லிக்கட்டினை பொறுத்தளவுக்கு அதிகளவு பரிசுப் பொருட்கள் வழங்கப்படாவிட்டாலும் முத்துமாரியம்மன் கோயில் வாடி வாசலில் காளைகள் அவிழ்க்கப்பட்டால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாகவும், வேறு எந்த வாடிவாசலிலும் பிடி பாடது என்பதும் காளை வளர்ப்பவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில், இலுப்பூர் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: மதுரை ரயில் நிலையத்தில் 'கருவாடு' விற்பனைக்கு கடை - தெற்கு ரயில்வே ஏற்பாடு

ABOUT THE AUTHOR

...view details