தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலைய கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு - jallikattu at pudhukottai malaya kovil

புதுக்கோட்டை: மலைய கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் மலையகோவில் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் மலையகோவில் ஜல்லிக்கட்டு

By

Published : Jan 29, 2021, 10:34 PM IST

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைய கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்றுவருகிறது.

இப்போட்டியில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 375-க்கும் மேற்பட்ட காளைகள் பங்குபெற்றுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் மலையகோவில் ஜல்லிக்கட்டு

காளைகளை அடக்க 220 மாடுபிடி வீரர்கள் களத்தில் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல், அவர்களை திணறடித்தன.

போட்டியில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க... 'ஆள்மாறாட்டம் செய்தாலும் 12 காளைகளைப் பிடித்தவர் கண்ணன்தான்' - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழப்பத்திற்குத் தீர்வு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details