தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2020, 3:57 PM IST

ETV Bharat / state

ஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டி ஆர்ப்பாட்டம் !

புதுக்கோட்டை : ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அரசு மேற்கொண்ட குற்றவியல் நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டி ஆர்ப்பாட்டம் !
ஜாக்டோ-ஜியோ போராட்டம் : ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டி ஆர்ப்பாட்டம் !

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மூன்று அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட், "2019ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது தமிழ்நாடு அரசால் குற்றவியல் நடவடிக்கை , தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை நிலுவையில் உள்ளது. அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் 6 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற முடியாமல் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை இனியும் காலம் தாழ்த்தாமல் மேற்கொண்ட நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழ்நாடு குடிமைப்பணி ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை உடனடியாக கைவிட வேண்டும்" என வலியுறுத்தினார்.

ABOUT THE AUTHOR

...view details