பழைய ஓய்வூதியத் திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் ஈடுபட்டனர்.
அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நோக்கத்தோடு மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் பேட்ரிக் ரைமன் மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஐந்து ஆயிரத்து 68 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை ரத்து செய்யவும், தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மனு கொடுத்தனர்.
இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் மூலம் முதலமைச்சருக்கு மனு அனுப்புவதற்கான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரால் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:பொதுப் போக்குவரத்து தடை நீடிப்பு; மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை