புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வருமானவரித் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதேபோல், தேர்தல் பறக்கும் படையினரும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதியின் ஆதரவாளரும் கோட்டையூர் திமுக ஊராட்சி மன்றத் தலைவருமான ராமத்திலகம் மங்களராமன் வீட்டிலும் இன்று (ஏப். 3) காலை வருமான வரித்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.