புதுக்கோட்டை மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள குளம் சுமார் 50 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. குளத்தை தூர்வாரக்கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் குளம் இருக்கும் இடம் தெரியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.
குளம் தூர்வாராதற்கு இதுஒரு காரணமா..? கிராம மக்கள் ஆதங்கம் - Is this a reason for the pond to fall out?
புதுக்கோட்டை: தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதியில் உள்ள குளங்கள் என்பதால் அரசு அலுவலர்கள் தூர்வார மறுப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூறுகையில், சத்தியமங்கலம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம், எங்களது விவசாயத்திற்கு தண்ணீர் மிகவும் அவசியமாக இருக்கிறது. இந்நிலையில், பெங்களூரு பகுதியில் உள்ள இரண்டு குளங்களும் தூர்வாரப்படாமல் இருக்கிறது.
இதுகுறித்து பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆளுங்கட்சியின் சொல்லைக் கேட்டு கொண்டு அலுவலர்கள் தாழ்த்தப்பட்ட பகுதியில் இந்த இரண்டு குளங்களும் இருப்பதால் தூர்வார மறுக்கின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறோம் என்றார்.