தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலக பெண் குழந்தைகள் தினம்: மருத்துவமனையில் மரக்கன்றுகள் நட்ட மாணவர்கள் - Student sapling a tree at hospital

புதுக்கோட்டை: உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மாணவிகள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

International Girl Child Day
International Girl Child Day

By

Published : Oct 13, 2020, 2:18 AM IST

உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வளாகங்களிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மருத்துவர்கள் செவிலியர் மற்றும், மாணவிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து செடிகளை நடவு செய்தனர். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதி மொழியையும் எடுத்துக்கொண்டனர்.

அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி பேசுகையில், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்காணிப்பாளர் மரு. ராஜ்மோகன், துணை முதல்வர் மரு. கலையரசி, நிலைய மருத்துவர் மரு. இந்திராணி மற்றும் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த சட்ட மருத்துவத் துறை மருத்துவர்கள் மரு. தமிழ்மணி மரு. வள்ளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்


இதையும் படிங்க: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளுக்கு ரூ.14 லட்சம் வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details