புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் சார்பில் இருவார கால தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு, விழிப்புணர்வு முகாம் இன்று தொடங்கப்பட்டது. இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்க விழிப்புணர்வு முகாம்! - தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவம்
புதுக்கோட்டை: குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்கும் விழிப்புணர்வு முகாமை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கிவைத்தார்.
குழந்தைகள் இறப்பு விகிதம் குறைக்க விழிப்புணர்வு முகாம்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய அளவில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதிலும் வயிற்றுப் போக்கினால் பச்சிளம் குழந்தைகள் இறக்கும் விகிதத்தைக் குறைக்கும் நோக்கத்துடன் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த முகாம் இன்று முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு செய்யப்படும்.