தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் கோட்டையான புதுக்கோட்டை - ஜொலித்த சுதந்திர தினவிழா - சுதந்திர தின விழா

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு
மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

By

Published : Aug 15, 2021, 11:36 AM IST

புதுக்கோட்டை: நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டப்பட்டுவருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பின்னர் திறந்தவெளி ஜீப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபனுடன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதான புறா பறக்கவிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு

புதுக்கோட்டையில் மகளிர் தலைமை

இதனைத் தொடர்ந்து தேசிய கொடியை பிரதிபலிக்கும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. அதேசமயம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 343 காவலர்கள், அரசு அலுவலர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று காலமாக இருப்பதால் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது புதுக்கோட்டையில் மகளிரே அனைத்து துறைகளிலும் தலைமை வகித்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து கொடி ஏற்றி வைத்த நிகழ்வு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: 'நிதிச்சுமையிலும் மக்களை காக்கத் தயங்கவில்லை' - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details