தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை! - a man commits suicide

புதுக்கோட்டை: அறந்தாங்கியில் மது கிடைக்காத விரக்தியில் லாரி ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

By

Published : Apr 7, 2020, 12:36 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (47), அறந்தாங்கியில் தங்கி இருந்து லாரி ஒட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் வருமானம் இல்லாமல் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கம் உள்ள கருப்பையா டாஸ்மாக் மதுபானக் கடை பூட்டப்பட்டிருப்பதால், மது குடிப்பதற்கு வழியில்லாத விரக்தியில் அறந்தாங்கி கட்டுமாவடி சாலை பெட்ரோல் பங்க் அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...அத்தியாவசிய பொருட்களின் கடைகளை மதியம் 1 மணிக்கு மூட உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details