புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு வந்த ரகசியல் தகவல் வந்தது.
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது: 195 மதுபாட்டில்கள் பறிமுதல்! - 195 மது பாட்டில்களை பறிமுதல்
புதுக்கோட்டை: அன்னவாசல் அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரைக் கைது செய்து அவரிடம் இருந்த 195 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையடுத்து புதுக்கோட்டை மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சுகுணா தலைமையிலான காவல்துறையினர் நேற்று அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் பகுதியில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.
அப்போது சித்தன்னவாசல் ஊரணிகுளம் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பன்னீர்செல்வம் (32) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 195 மது பாட்டில்கள் மற்றும் மதுபானங்கள் விற்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: சிசிடிவில் சிக்கிய செயின் கொள்ளையர்கள்!
TAGGED:
195 மது பாட்டில்களை பறிமுதல்