தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை - sivadoss

புதுக்கோட்டை: பொன்னமராவதி விவகாரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்த இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸை, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ்

By

Published : Apr 24, 2019, 5:20 PM IST

Updated : Apr 24, 2019, 5:39 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கடந்த 18ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள், ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

19ஆம் தேதி வரை நீடித்த இந்த போராட்டம் கலவரமாக மாறி காவல்நிலையத்தின் மீது கற்கள் வீசப்பட்டன. இந்தக் கலவரத்தில் மூன்று காவல்துறையினர் பலத்த காயமடைந்தனர். மேலும், காவல்துறையினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது.

போராட்டம் கலவரமாக மாறி பதற்றமான சூழல் உருவானதையடுத்து பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள 49 கிராமங்களுக்கு 144 உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டார். 144 தடை உத்தரவுக்கு பிறகு பொன்னமராவதியில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Last Updated : Apr 24, 2019, 5:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details