புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகாவைச் சேர்ந்தவர் கௌசல்யா (20). இவருக்கும் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், தெம்மாவூர் அருகே வடுதாவயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (22) என்பவருக்கும், கடந்தாண்டு காதல் திருமணம் நடந்துள்ளது.
மனைவியுடன் கருத்து வேறுபாடு: கணவன் தூக்கிட்டுத் தற்கொலை - youngster commit suicide pudukkottai
புதுக்கோட்டை: மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
pudukkottai
கௌசல்யா கந்தர்வகோட்டை பகுதியில் செவிலியாகப் பணிபுரிந்துவருகிறார். கணவன், மனைவி இருவரும் கந்தர்வகோட்டை பெருமாள் கோயில் அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக சிறு, சிறு பிரச்னைகள் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக சரவணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கௌசல்யா கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.