புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேலமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அமராவதி. இன்று இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது கனமழை பெய்ததால் வீட்டின் சுவர் ஈரம் தாங்கமால் இடிந்து விழுந்தது.
இதில் அமராவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாகுடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.