மோட்டார் வாகனச் சட்டப்படி தமிழகத்தில் தற்பொழுது ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் ஹெல்மெட் அணிவதால் தவிர்க்கப்படும் என்பதால், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்வழிச்சாலையைச் சேர்ந்த ஆண்கள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்கு பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, 119 வருடங்களாக நாங்கள் இந்த மெய்வழிச்சாலை மதத்தை கடைபிடித்து வருகிறோம். எந்த ஒரு ஜாதி மதம் இல்லாமல் என் தமிழ்மொழிச் சாலையில் வசித்து வருகிறோம். நாங்கள் அணியும் தலைப்பாகையை தூங்கும்பொழுது மட்டுமே கழற்றி வைப்போம், மற்ற நேரங்களில் அதை அணிந்தே இருப்போம். ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை வந்தபொழுது தலைப்பாகையைக் கழட்ட வேண்டுமா என்ற கோணத்தில் சிந்தித்தோம்.