அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில், புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.
நேற்று (ஜுன் 6) மாலை திடீரென்று கருமேகம் சூழ்ந்து, இரவு போல் காட்சி அளித்தது. பிறகு பலத்த காற்றுடன் மழைப் பொழிந்தது.
இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை நகரப்பகுதியான திருக்கோகர்ணம், கோவில்பட்டி, பிருந்தாவனம் பழைய பேருந்து நிலையம், போஸ் நகர், காமராஜபுரம், நிஜாம் காலனி, பெரியார் நகர், ராஜகோபாலபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.