புதுக்கோட்டை மாவட்டம் திருச்சி செல்லும் சாலையின் அருகே உள்ள செல்வா நகர் என்னும் இடத்தில் 20 பெண்கள் இணைந்து 120 வகையான அரிசி வகைகள், சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சாமை, திணை, கருத்தக்கார், மாப்பிள்ளை சம்பா, கொள்ளு, ஆகியவற்றைக் கொண்டு முறுக்கு, அதிரசம், லட்டு, மிக்சர் என அனைத்து வகையான பலகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகளிடமிருந்து சிறுதானியங்களை நேரடியாக வாங்கி முழுக்க முழுக்க ஆர்கானிக் வகைகளால் செய்யப்படும் பலகாரங்களை விற்பனை செய்துவருகின்றனர். இதனால் விவசாயிகளும் பயனடைந்துவருகின்றனர்.