தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திட்டமிட்டு திமுகவினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துகின்றனர் - விஜயபாஸ்கர் - tn election

புதுக்கோட்டை: விராலிமலையில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், வேண்டுமென்றே திமுகவினர் சலசலப்பை ஏற்படுத்தி எண்ணிக்கையை நிறுத்துகின்றனர் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

-vijayabaskar
விஜயபாஸ்கர்

By

Published : May 2, 2021, 10:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பபட்டுள்ளது. சுமார் 10 மணி நேரமாகியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறாதது, தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "விராலிமலை தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்துவருவதால், வேண்டுமென்றே திமுகவினர் சலசலப்பை ஏற்படுத்தி எண்ணிக்கையை நிறுத்துகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்டு 11 மணிநேரம் ஆகியும் இதுவரை அஞ்சல் வாக்குகள் எண்ணப்பப்படவில்லை. வாக்கு இயந்திரத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அந்த இயந்திரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு வாக்கு எண்ணிக்கையைத் தொடர வேண்டும்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அப்படி செய்யாமல், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவது எந்தவிதத்தில் நியாயம். தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இது தொடர்பாக இரண்டு முறை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இங்கிருக்கும் மாவட்டத் தேர்தல் அலுவலர்களுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details