புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில், ஆட்சியர் உமா மகேஸ்வரி, காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், காவல்துறையினருக்கு கரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 743 பேர் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டுள்ளனர்.
முன் உதாரணமாக பல மாவட்டங்களில் ஆட்சியர் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அலுவலர்கள் தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்டுள்ளனர். தடுப்பு மருந்து குறித்து முன்களப் பணியாளர்கள், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. ஒரு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். தயக்கம் தேவையில்லை இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.