வாராப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த பாஜக மூத்தத் தலைவர் எச். ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பெண்களுக்கு எதிராகப் பேசிய விசிக தலைவர் திருமாவளவனை தமிழ்நாடு அரசு ஏன் இதுவரை கைதுசெய்யவில்லை? உடனடியாக திருமாவளவனை கைதுசெய்யாவிட்டால், அதற்கான அழுத்தத்தை பாஜக கொடுக்கும்.
நவராத்திரியின்போது இந்து மதத்தை இழிவுப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, பெண்கள் குறித்த கருத்தை, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் தூண்டுதலின்பேரில் திருமாவளவன் பேசியுள்ளார்.