தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி வாரத்துக்கு மூன்று நாட்கள்தான் மளிகைக் கடைகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் - Grocery shops in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தில் மளிகைக் கடைகள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே செயல்படும் என மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார்

புதுக்கோட்டையில் இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு
புதுக்கோட்டையில் இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே மளிகை கடைகள் திறக்கப்படும் - ஆட்சியர் அறிவிப்பு

By

Published : Apr 11, 2020, 3:55 PM IST

இது குறித்து அவர் கூறுகையில்,

"புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்தவும் தூய்மைப்படுத்தும் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக நோய் பரவலை தடுக்கும்பொருட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளும் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் மட்டுமே செயல்படும்.

அக்கடைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கால அளவான காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், "இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனவும் அவர் எச்சித்திரித்துள்ளார்.

இதையும் படிங்க:ஊரடங்கை தாமதம் செய்யாமல் நீட்டிக்க வேண்டும்’ - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

ABOUT THE AUTHOR

...view details