புதுக்கோட்டை மாவட்டம் தளவரை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி கவிதா(35), தனது இருசக்கர வாகனத்தில் மீமிசலில் வீட்டிற்கு தேவையானப் பொருள்களை வாங்கிவிட்டு திரும்பியுள்ளார். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபர் கம்பியால் கவிதாவைத் தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.
தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற நபருக்கு வலைவீச்சு - crime news tamilnadu
புதுக்கோட்டை: தங்கச் சங்கிலிக்காக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணைத் தாக்கிய அடையாளம் தெரியாத நபரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்தத் தாக்குதலில் நிலைதடுமாறிய கவிதா, அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்து கத்தியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், கவிதாவை மீட்டு மீமிசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர், மர்ம நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:கரோனா விழிப்புணர்வு: மாணவர்களின் கவிதைகள், ஓவியங்களுக்கு பரிசு! - மாவட்ட ஆட்சியர் தகவல்