தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கந்தர்வகோட்டை அருகே கிடந்த துணி மூட்டை - அடுத்து நடந்தது என்ன? - Pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே துணியில் கட்டி வயலில் மண்ணில் புதைந்து இருந்த கோபுர கலசம், உரிய கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

கந்தர்வகோட்டை அருகே கிடந்த துணி மூட்டை - அடுத்து நடந்தது என்ன?
கந்தர்வகோட்டை அருகே கிடந்த துணி மூட்டை - அடுத்து நடந்தது என்ன?

By

Published : Mar 1, 2023, 4:12 PM IST

புதுக்கோட்டை:கந்தர்வகோட்டை அருகே அமராவதி உடனுறை ஆபத் சகாயயேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே பிடாரி அம்மன் கோயிலும் உள்ளது. இந்த நிலையில், இன்று (மார்ச் 1) அப்பகுதியைச் சேர்ந்த கதிரவன், விஜி, தவச்செல்வன் மற்றும் சித்திரை வேல் ஆகிய நான்கு பேரும் காலையில் கபடி விளையாடச் சென்றுள்ளனர்.

அப்போது, அங்கிருந்த வயலில் ஏதோ ஒன்று துணியில் கட்டிய நிலையில் மூட்டையாக கிடப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக, அதன் அருகில் சென்று துணி மூட்டையை திறந்துப் பார்த்துள்ளனர். அதில், விலைமதிப்பற்ற கோபுர கலசம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, இளைஞர்கள், உடனடியாக கந்தர்வகோட்டை காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், கலசத்தை மீட்டு கலசங்கள் எடுத்தவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் முன்னிலையில் வட்டாட்சியர் ராஜேஸ்வரியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கண்டெடுக்கப்பட்ட இந்த கோபுர கலசம், பிடாரி அம்மன் கோயில் கலசம் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி, இந்து சமய அறநிலைத்துறைக்குத் தகவல் அளித்துள்ளார்.

பின்னர் நடத்தப்பட்ட பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, கோபுர கலசத்தை கந்தர்வகோட்டை குருக்கள் பாலா தண்டாயுதபாணியிடம் அரசு அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் இந்த பிடாரி அம்மன் கோயிலின் கோபுர கலசம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதனிடையே 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோயில் கலசம் திரும்ப கிடைத்ததால் அப்பகுதியில் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க:திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா.!

ABOUT THE AUTHOR

...view details