புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன்பட்டியில் நேற்று (பிப்.07) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மட்டுமல்லாது திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகளை அலுவலர்கள், விழாக் குழுவினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன.