புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள டி.களபம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவரது மகள் ஹரிஷ்மா. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த நிலையில், நீட் தேர்வு எழுதவுதற்காக விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், தன்னுடன் படித்த சக மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வந்துள்ளது.
தனக்கு மட்டும் ஹால் டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி, கடந்த 31ஆம் தேதி வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நேற்று (செப்.1) நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வந்துள்ளது. மாணவி வயிற்று வலி பிரச்னை காரணமாக தற்கொாலை செய்துக்கொண்டதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சக மாணவிகளிடம் விசாரித்தபோது, ஹால் டிக்கெட் வராததால் ஹரிஷ்மாவை அவரது தந்தை திட்டியதாக் கூறப்படுகிறது.