புதுக்கோட்டை: இலுப்பூர் மேலப்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது வீட்டில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கட்டியிருந்த ஆடுகள் திடீரென காணாமல் போயுள்ளன. எனவே, இது தொடர்பாக இலுப்பூர் காவல் நிலையத்தில் மூர்த்தி புகார் அளித்துள்ளார்.
அதேநேரம் கடந்த இரண்டு மாதங்களாக இலுப்பூர் காவல் நிலையப் பகுதிக்குள் பல்வேறு ஆடுகள் திருடப்பட்டு வருவதாக புகார் வந்துள்ளன. எனவே, விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறையினர், ஆடு திருடியது தொடர்பாக நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட இலுப்பூர் ஊத்துக்காடை சேர்ந்த மோகன்ராஜ் (20), மேலப்பட்டியைச் சேர்ந்த கார்மேகம் (25), சாலைப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் (21) மற்றும் மெய்யக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பிரபாகரன் (21) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆடு திருடியது உறுதி செய்யப்பட்டது.
கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யபட்ட ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனம் இதனையடுத்து அவர்களிடமிருந்து நான்கு ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:நிச்சயதார்த்த நாளில் Ex-காதலனால் கடத்தப்பட்ட பெண்; சினிமாவை மிஞ்சும் நிஜம்