புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 96 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது பால்ராஜ் (58) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த பாரதி (30), அசோக் (28), சக்திகுமார் (30), மணி (33) ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - Pudukkottai fishermen
புதுக்கோட்டை: ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
fishermen
32 மைல் நாட்டிகல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைதுசெய்தனர். இதனையடுத்து அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசென்று விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் ஆட்சியில்தான் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் -அமைச்சர் ஜெயக்குமார்