புதுக்கோட்டை:தமிழ்நாடு முழுவதும் இன்று மின் உயர்வு கட்டணம் மற்றும் பால் விலை உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை செக்போஸ்டில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
அதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது, 'மக்கள் நினைத்தால் ஆட்சியில் யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவர். இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சி முடிந்துவிட்டது, இன்னும் மக்கள் இரண்டு ஆண்டுகள் மட்டும் பல்லை கடித்து ஓட்டி விட்டால் மீண்டும் அண்ணா திமுக ஆட்சி தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும்.