தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பராமரிக்க முடியாத கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் - பொன் மாணிக்கவேல்

தமிழ்நாட்டில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ அவற்றை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Former IG Pon Manickavel
மாஜி ஐஜி பொன் மாணிக்கவேல்

By

Published : Jul 19, 2023, 9:29 AM IST

ன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் அளித்த பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் அழியும் நிலையில் உள்ள கோயில்களை பார்வையிட்டு அவற்றின் நிலைமையைப் பதிவு செய்வதற்காக புதுக்கோட்டை வந்த முன்னாள் காவல் துறை ஐஜி பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "தமிழ்நாட்டில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்களை அரசால் பராமரிக்க முடியவில்லையோ, அவற்றை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன 10இல் ஒரு மடங்கு சிலைதான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 165 தொன்மை வாய்ந்த கோயில்கள் பராமரிக்க முடியாமல் அழியுற்ற நிலையில் உள்ளது. இந்த கோயில்கள் அனைத்தும் 600இல் இருந்து 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆனால், அவற்றை அரசு பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறுகின்றார். தமிழ்நாட்டில் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு காவல் துறையில் சாட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல் துறை செயல்படுகிறது.

எனது ஆலோசனைகளை தமிழ்நாடு அரசு ஏற்பதில்லை. ஆலோசனை கேட்கும் அதிகாரிகளும் தற்போது கிடையாது. அவர்கள் ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை. தற்போது அனைவரும் தெய்வ விக்கிரகங்களை மட்டுமே பொக்கிஷங்களாக பார்க்கின்றனர். ஆனால் அது தவறு. அங்கு உள்ள கல்வெட்டுக்கள் அனைத்துமே பொக்கிஷங்கள்தான். இவைகள்தான் நமக்கு அடையாளம் கொடுக்கிறதே தவிற, அரசியல்வாதிகளோ, அரசியல் கட்சிகளோ அடையாளம் கொடுப்பது கிடையாது.

நிதிக்காகத்தான் அரசியல் கட்சிகள் சண்டை போடுகின்றன. ஒரு 20 சதவீதம் கமிஷனுக்காக அரசியல் கட்சிகள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். மேலும், சிதம்பரம் கோயில் மிக தொன்மையான கோயில். கனக சபை உள்ளிட்ட விவகாரங்களில் நான் தலையிட விரும்பவில்லை. சிவனடியார்கள் மற்றும் பெருமாள் அடியார்கள் எங்கு இருக்கிறார்களோ, அங்கு நான் செல்வேன். ஏனென்றால் அங்குதான் ஆன்மீகம் உள்ளது.

இதுவரை மோசமான ஆட்கள் என்று காவல் துறையினர் பெயர் எடுத்துள்ளோம். காவல் துறையினர் பெயர் பொதுமக்கள் மத்தியில் அதிகளவில் கெட்டுப் போய் உள்ளது. கருத்துக்கள் நடத்தினால் 10 சதவீத மக்கள் கூட காவல் துறையினரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஓசியில் ஆம்லெட் கேட்கும் நிலைக்கு காவல் துறையினர் உள்ளனர். மேலும் காவல் துறை அதிகாரி மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் இருவரையும் சரிசம நிலையில் வைத்து பார்க்க வேண்டும்.

அதே போல குற்றம் நடக்கும் இடத்தில் இருந்து சாட்சி சொல்ல வருபவர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்க வேண்டும். சாட்சிகளை நிற்க வைத்து கேள்வி கேட்காமல் உட்கார வைத்து விசாரணை நடத்த வேண்டும். அயல்நாடுகளில் ஒரு சாட்சிகளைக் கூட நிற்க வைத்து பேசுவது இல்லை. நீதிமன்றத்தில் எப்போது உட்கார வைத்து பேசுகின்றனரோ, அன்று தான் மிகப்பெரிய விமோச்சனம் கிடைக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் உயிரையும் துட்சமாக நினைத்து, சொந்த செலவில் சாட்சி சொல்ல வருகின்றனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: டிஐஜி தற்கொலை குறித்து சமூகவலைதளங்களில் பேசிய நபர்கள் மீது விசாரணை

ABOUT THE AUTHOR

...view details