புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி, அவரது மகன் முத்து ஆகிய இருவரும் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். அதே பகுதியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முத்து சில இடங்களை யாரிடமும் அனுமதி பெறாமல் விற்றதாக, அதனை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தன்னைக் கேட்காமல் எதுவும் செய்யக் கூடாது எனவும் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் முத்து மற்றும் அவரது தந்தை வீராசாமி தங்களது தொழிலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இதனால் கோபமடைந்த மூர்த்தி அவர்கள் இருவரையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பேச வேண்டும் எனக்கூறி இன்று (பிப்.6) காலை கீரனுாரில் உள்ள அவரது தோப்பிற்கு வரவழைத்துள்ளார்.