கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை, மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனால் அன்றாடக் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் உணவுக்கே வழி இல்லாமல் பசியில் உள்ளனர்.
பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கும் மக்கள் ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பல்வேறு தன்னார்வலர்கள், இளைஞர்கள் வீட்டில் சமைத்த உணவுகளைப் பசியால் வாடுபவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் குறிப்பிட்ட வீதியில் இருக்கும் பெண்கள், ஆண்கள் இணைந்து வீட்டிலேயே உணவு சமைத்து பசியில் உள்ள மக்களை தேடிச் சென்று உணவளித்து வருகின்றனர். ஆதரவற்றோருக்குப் பசி போக்கும் செயல், பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: கரோனா வாரியர்ஸுக்குத் தொடர்ந்து உணவு வழங்கிவரும் உணவக உரிமையாளர்!