தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பசியால் உயிரிழந்து விடுவோம்' - வேதனையில் மீனவப் பெண்கள்! - பசியால் உயிரிழந்து விடுவோம்: புலம்பும் மீனவப் பெண்கள்

புதுக்கோட்டை: ஊரடங்கால் வேலையின்றித் தவித்து வரும் மீனவப்பெண்கள் கரோனாவால் உயிரிழக்கிறோமோ இல்லையோ... ஆனால், பசியால் உயிரிழந்துவிடுவோம் என வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை செய்திகள்  மீனவப் பெண்கள்  கோட்டைப்பட்டினம்  pudhukottai news  fisher women  die of hunger  தரமற்ற ரேஷன் அரிசி
பசியால் உயிரிழப்போம்..ரேஷன் அரிசி தரமற்றவையாக உள்ளதென குற்றஞ்சாட்டும் மீனவப் பெண்கள்

By

Published : May 26, 2020, 11:21 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கடலோரப்பகுதியான கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, ஜெகதாப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் ஊரடங்கால் கடலுக்குச் செல்லவில்லை. இதனால், அவர்களின் வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத காலமாக வருமானமின்றித் தவித்து வரும் அவர்கள், அரசு நியாயவிலைக் கடைகளில் தரப்படும் அரிசி, பருப்பு ஆகியவற்றை வைத்து தங்கள் பசியைப் போக்கி வருகின்றனர்.

அரிசு உள்ளிட்டப் பொருள்களை நியாயவிலைக்கடைகள் மூலம் அரசு வழங்கினாலும்; அது தரமற்றவையாக உள்ளதென அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மீனவப் பெண்களின் வேதனை

இதுகுறித்து அப்பகுதி மீனவப் பெண்கள் தெரிவித்த போது, " இரண்டு மாதங்களாக மீன் வியாபாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறோம். எங்கள் குழந்தைகள் எல்லாம் பசியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். எங்களுக்குத் தரவேண்டிய நிவாரணத் தொகையையும் அரசு முறையாக வழங்கவில்லை.

நியாயவிலைக் கடைகளிலும் பொருள்கள் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை. அரசு வழங்கும் அரிசி தரமற்ற முறையில் இருப்பதால், குழந்தைகளுக்கு அதில் உணவு சமைத்துத் தரமுடியவில்லை. எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும். நோய் வந்து உயிரிழப்பமோ இல்லையோ... நிச்சயம் பசியால் விரைவில் உயிரிழந்துவிடுவோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஊரடங்கால் அவதி - ஏழைகளின் பசியை போக்கும் புதுக்கோட்டை இளைஞர்கள்

ABOUT THE AUTHOR

...view details