தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை உள்ளாட்சித் தேர்தல்: முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வம் - #localbodyelections

புதுக்கோட்டை: முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டையில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வம்
புதுக்கோட்டையில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வம்

By

Published : Dec 27, 2019, 12:47 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்கட்டமாக அன்னவாசல், குன்றாண்டார்கோவில், புதுக்கோட்டை, விராலிமலை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1056 வாக்குப் பதிவு மையங்களில் 2 லட்சத்து 40 ஆயிரத்து 795 ஆண் வாக்காளர்கள் 2 லட்சத்து 38 ஆயிரத்து 977 பெண் வாக்காளர்கள் 19 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 4 லட்சத்து 79 ஆயிரத்து 791 பேர் வாக்களிக்கின்றனர். காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மணிகண்டன் என்பவர் தனது முதல் வாக்கை செலுத்தினார்.

புதுக்கோட்டையில் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வம்

இது குறித்து அவர் கூறுகையில், "முதல்முறையாக ஜனநாயக கடமையை ஆற்றி இருப்பது பெருமையாக இருக்கிறது. ஒரு நல்ல தலைவர் பதவி ஏற்ற பிறகு தேவையான அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நேர்மையானவர்களுக்கு வாக்களித்திருக்கிறோம். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்க இளைஞர்களாகிய நாங்கள் நினைக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!

ABOUT THE AUTHOR

...view details