தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புதுக்கோட்டை மாவட்ட பட்டாசு ஆலையில் தீ விபத்து; இருவர் உயிரிழப்பு - புதுக்கோட்டை மாவட்ட செய்தி

பூங்குடி கிராமத்தில் கடந்த 30ஆம் தேதி பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து பேரில் இருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 4, 2023, 5:11 PM IST

புதுக்கோட்டை: வெள்ளனூர் காவல் நிலையம் அருகே உள்ள பூங்குடி கிராமத்தில் வைரமணி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு உரிமம் பெற்று பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து விதமான விழாக்களுக்கும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. விடுமுறை நாளிலும் பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட ஆறு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணி உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.

இதில் பட்டாசு ஆலை உரிமையாளர் வைரமணிக்கு லேசான காயமும், மற்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து இவர்கள் 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் சம்பவ நடந்த இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து பேருக்கும், கடந்த ஐந்து நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 5 நபர்களையும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

மேலும் மருத்துவர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் கம்மாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து (வயது 31) என்பவர் நேற்று இரவு 9.15 மணியளவிலும், புதுக்கோட்டை மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த திருமலை (வயது 30) என்பவர் இன்று அதிகாலை 3.45 மணிக்கும் சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களுடைய உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை; கைதான நபர் பரபரப்பு வாக்குமூலம்!

ABOUT THE AUTHOR

...view details