புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் சிவபுரத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான இரும்பு குடோன் உள்ளது. இங்கு பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டைப் பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று மதியம் திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கொழுந்து விட்டு தீ எரியத் தொடங்கியதால் 50 அடி தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவலறிந்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.