புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில், மணமேல்குடி, பெருங்காடு, நாகமங்கலம் போன்ற கிராமங்களில் கோடை காலங்களில் தர்பூசணி விவசாயம் களைகட்டும். ஆனால் இந்தாண்டு கரோனா நோய்க் கிருமியின் பரவலான தாக்கத்தால், அரசு அறிவித்த 144 தடையை அடுத்து, தர்பூசணி வியாபாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அழுகும் பழங்கள்! - வேதனையில் விவசாயிகள்
ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தர்பூசணி பழத்தின் மோகமும் அதிகரிக்கும். ஆனால் தற்போது கரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் விற்பனையாகாமல் தர்பூசணி பழங்கள் அனைத்தும் கொடியிலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதியிலுள்ள விவசாயி, “நாங்கள் கடன் வாங்கி இந்த விவசாயத்தை செய்து வருகிறோம். ஆனால் இந்தாண்டு விவசாயம் எங்களுக்கு முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. வியாபாரிகள் யாரும் எங்கள் தோட்டத்திற்கு வந்து பழங்களை வாங்கவில்லை.
இதனால் பழங்கள் தோட்டத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளன. கடின உழைப்பையும், பெரும்பணத்தையும் முதலீடு செய்து விவசாயம் செய்து இப்படி வீணாக போவதைப் பார்க்கும் பொழுது தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இந்த ஆண்டு வருமானத்திற்கு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை. இதற்கு மாநில அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
TAGGED:
waterlemon farming