புதுக்கோட்டை: கிடாரம்பட்டியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால் கிடாரம்பட்டியைச் சுற்றியுள்ள 5 கிராமங்களின் விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.
முன்னதாக அங்கு ரூ.50 லட்சம் மதிப்பில் குடோன் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது இன்னும் கட்டி செயல்பாட்டுக்கு வரவில்லை.
மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி செய்த விவசாயிகள், அறுவடை செய்த நெல் மூட்டைகளை கிடாரம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு கொள்முதல் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த 15 நாட்களாக 500க்கும் மேலான நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று (ஜுன் 11) கொள்முதல் நிலையம் திறக்கப்படுவது ஆக இருந்தது. ஆனால், ஒரு சிலர் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக கொள்முதல் நிலையத்தை திறக்க விடாமல் செய்துள்ளனர்.
இதனால் தற்போது இயங்கி வரும் கொள்முதல் நிலையம், அனைத்து கிராமங்களுக்கும் மையப் பகுதியாக இருப்பதால், வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது எனவும்; அதே இடத்தில்தான் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைகளை முன் நிறுத்தி விவசாயிகள் நேற்று (ஜுன் 11) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு நேரடி கொள்முதல் நிலையத்தை அதே இடத்தில் திறப்பதற்கும், நெல்லை கொள்முதல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் யாரும் தீவிர சிகிச்சை நிலைக்கு செல்லவில்லை'- சிஎம்சி மருத்துவமனை