தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மருத்துவர் கைது - தமிழ் செய்திகள்

புதுக்கோட்டை: ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்து அதில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்த போலி நபர் கைது செய்யப்பட்டார்.

போலி மருத்துவம்
போலி மருத்துவம்

By

Published : Apr 30, 2020, 3:33 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி செட்டித்தெரு முக்கம், ஹரிஹரன் காம்ப்ளக்ஸில் அன்பு இரத்தப் பரிசோதனை நிலையம் வைத்து பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது.

போலி மருத்துவம்

இந்நிலையில் புகாரின் பேரில் தாசில்தார் சேக் அப்துல்லா அவரது அலுவலர்களுடன் அங்கு சென்று திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு கறம்பகுடியைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் டிப்ளமோ மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து தாசில்தார் சேக் அப்துல்லா, காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், மருத்துவ அதிகாரி துரைமாணிக்கம் ஆகியோர் கடைக்கு சீல் வைத்து அன்பழகனை கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலி மருத்துவர்

மேலும் கறம்பக்குடி காவல் துறையினர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்பு அன்பழகனை கைது செய்து ஆலங்குடி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நல்லக்கண்ணன் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தண்ணீர் சேகரிக்கும் குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details